latest news
காரை வழிமறுத்து கொள்ளை முயற்சி!.. 5வது நபரையும் கைது செய்த போலீசார்!..
சமீபத்தில் கோவை மாவட்டம் மதுரைக்கரை அருகே பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் காரை வழிமறுத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் சமீபத்தில் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 13ம் தேதி நள்ளிரவு கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரை முந்தி சென்று வழிமறித்து நின்றது ஒரு கார். பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த சிலர் அந்த காரிலிருந்து இறங்கி காரில் இருந்தவர்களை தாக்க முயன்றனர். ஆனாலும், லாவகமாக காரை ஓட்டி அதிலிருந்தவர்கள் தப்பினர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அஸ்லாம் சித்திக். இவர் ஒரு விளம்பர ஏஜென்ஸி ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி இவர் தனது நண்பர்களுடன் பெங்களூர் சென்றிருக்கிறார். அங்கு கம்ப்யூட்டர் மற்றும் சில பொருட்களை வாங்கி கொண்டு கோவை வழியாக கேரளா சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் முகமுடி அணிந்த 6 பேர் சித்திக் சென்ற காரை பின் தொடர்ந்துள்ளனர்.
அவரின் காரை அந்த கும்பல் வழிமறித்திருக்கிறது. ஆனாலும், கண்ணாடியை திறக்காமல் காரை ரிவர்ஸில் எடுத்து வேகமாக முன்னேறி அருகில் இருந்த சுங்கச்சாவடிக்கு சென்றுவிட்டார் சித்திக். அவர்களை அந்த கும்பல் துரத்தி வந்தநிலையில் அங்கு போலீசார் இருப்பதை பார்த்து தப்பி சென்றனர்.
போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சிவதாஸ், ரமேஷ் பாபு, விஷ்ணு, அஜய் குமார் ஆகியோர போலீசார் மடக்கிபிடித்தனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர். சித்திக்கிடம் ஹவாலா பணம் இருப்பதாக நினைத்து அவர்கள் கொள்ளையடிக்க முயன்றது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.