Connect with us

india

தக்காளிக்கு விடிய விடிய காவல் காத்த போலீஸ்.. பின்ன விக்கிற விலைவாசிக்கு சும்மாவா..? வைரல் வீடியோ..!

Published

on

ரோட்டில் கொட்டிக்கிடந்த தக்காளிகளை இரவு முழுவதும் உத்தரபிரதேச போலீசார் காவல் காத்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 18 டன் தக்காளிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்த லாரி உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதி அருகே கடக்க முயன்ற போது திடீரென்று அங்கு குறுக்கே பசுமாடுகள் வந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தடுமாறி கவிழ்ந்தது. இதனால் வண்டியில் இருந்த தக்காளிகள் அனைத்தும் சாலையில் சிதறிவிட்டன.

இந்த விபத்தில் லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த பெண் ஒருவரும் பலத்த காயமடைந்தார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இரவு நேரம் என்பதால் சாலையில் கிடந்த தக்காளிகளை சேகரிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதனால் காவல்துறையினர் விடியும் வரை காத்திருப்பதற்கு முடிவு செய்தார்கள். ஆனால் தக்காளி தட்டுப்பாடு காரணமாக தக்காளி விலை கிலோ 100 வரை விற்பனையாகி வரும் நிலையில் தக்காளி திருடு போகும் அபாயம் இருந்தது. இதனால் சாலையிலேயே தக்காளிகளுக்கு காவலாக இரவு முழுவதும் போலீசார் காத்திருந்தார்கள். இது தொடர்பான வீடியோவானது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் தக்காளி விக்கிற விலைக்கு பாதுகாப்பு கொடுத்து தானே ஆகணும் என்று கூறி வருகிறார்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *