india
வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…
ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு – காஷ்மீரில் மொத்தம் உள்ள தொன்னூறு சட்டமன்ற தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என சொல்லப்பட்ட நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்களர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முதற்கட்டமாக இருபத்தி நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. காஷ்மீர் பிராந்தியத்தில் பதினாறு தொகுதிகளிலும் , ஜம்மு பிராந்தியத்தில் எட்டு தொகுதிகளிலும் காலை ஏழு மணிக்கு பலத்த பாதுகாப்புடன் துவங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை நடந்து வருகிறது. வாக்குப் பதிவு துவங்கியதிலிருந்தே தங்களது வாக்குகளை பதிவு செய்ய பொது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேர்தல் நடத்தப்படும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்களிக்க பெண்களும், ஆண்களும் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
காலை பதினோறு மணி நிலவரப்படி 26.72 சதவீத வாக்குகளும்,பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி 41.17 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தது.
பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் 50.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜம்மு – காஷ்மீர் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில் ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்தும் வகையில் அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும், அதிலும் குறிப்பாக இளைஞர்கள், முதல் முறை வாக்கார்கள் தங்களது வாக்குகளை செலுத்தும்படி தான் அழைப்பு விடுப்பதாக பிரதமர் மோடி சொல்லியிருந்தார்.