latest news
கட்சி அலுவலக பெயர் மாற்றம்…அறிவிப்பை வெளியிட்ட பிரேமலதா…
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தங்களது கட்சி அலுவலகத்தின் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் துவங்கி இருபது ஆண்டுகள் ஆனதையொட்டி அக்கட்சி சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்கா சென்று திரும்பியுள்ள தமிழக முதலமைச்சரின் பயணம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
முதலமைச்சர் வெளிநாடு சென்ற போது அவருக்கு தங்களது கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்திருந்தாக சொன்னார். அதோடு அமெரிக்க பயணத்தின் மூலம் என்னென்ன திட்டங்களை தமிழகத்திற்கு ஈட்டுக் கொண்டு வந்திருக்கிறார், இதன் மூலம் எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தமிழகத்தின் உருவாக்க இருக்கிறார் என்பதனை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றார்.
கோயம்பத்தூர் ஹோட்டல் உரிமையாளர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கூட்டத்தில் தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து வந்த நிலையில், யதார்த்தமாக ஹோட்டல் உரிமையாளர் பேசிய விஷயத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் பூதாகரமாக மாற்றியது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். இது தேவை இல்லாத விஷயம் என்றார்.
தேசிய முற்போக்கு திராவிடக் கழக அலுவலகம் என இதுவரை அழைக்கப்பட்டு வந்த கட்சி அலுவலகம் இனி ‘கேப்டன் ஆலயம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்படும் என தெரிவித்தார்.