Connect with us

latest news

கிழியாத சட்டையை கிழித்ததாக விளம்பரம் தேடியது திமுகதான்!. பிரேமலதா ஆவேசம்…

Published

on

stalin

விஷச்சாரய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியை சேர்ந்த 60 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஒருபக்கம், தமிழகம் முழுவதும் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஒருபக்கம், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு திமுகவின் அலட்சியமே காரணம் என அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அதுவும் திமுக தரப்பில் 10 லட்சம் கொடுப்பதற்கு தேமுதிக கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது. குற்றத்தை தடுக்காமல் குடித்து இறந்து போனவர்களுக்கு பணம் கொடுப்பது எதற்கு? என பிரேமலதா கேள்வி எழுப்பி இருந்தார்.

ஒருபக்கம், சட்டசபையில் அவையை நடத்தவிடாமல் தொடர்ந்து 3 நாட்கள் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக எம்.எல்.ஏக்கள் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக விளம்பரம் தேடுவதாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுபற்றி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது ‘கிழியாத சட்டையை கிழித்ததாக காண்பித்து சட்டசபையிலிருந்து வெளியே வந்து பத்திரிக்கையாளர்களிடம் அதை காட்டி விளம்பரம் தேடினார் ஸ்டாலின். அதுதான் தமிழ்நாட்டின் உச்சபட்ச விளம்பரம்’ என பதிலடி கொடுத்திருக்கிறார்.

google news