Connect with us

latest news

கன மழைக்கான வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் எது எது?…வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்-டேட்…

Published

on

Rain

குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது என்றும், இந்த மழை அடுத்த ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் சொல்லியிருந்தது ஏற்கனவே.

இந்த சூழலில் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக அடுத்தடுத்து பெய்து வரும் மழையினால் வெயில் வாட்டி வந்த இடங்களில் இதமான சூழல் நிலவுவதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் வட-கிழக்கு பருவ மழை துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்பொது பெய்து வரும் இந்த மழை பலரையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.

RainFall

RainFall

கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகரைப் பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது.

மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு முப்பத்தி ஐந்து முதல் நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே ஐம்பத்தி ஐந்து கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

google news