india
ராம்லீலா நாடகத்தில் வந்த சண்டை… ராமனை புரட்டி எடுத்த ராவணன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!
ராம்லீலா நாடகத்தின் போது திடீரென்று சண்டை ஏற்பட்டு ராவணன் ராமனை சரமாரியாக தாக்கிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உத்திரபிரதேசம் மாநிலம், அம்ரோகா என்ற பகுதியில் நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது. பொதுவாக நவராத்திரி தினத்தில் ராவணன் தலையை ராமன் அம்பை எழுதி கொள்வார். ஆனால் இங்கு ஒரு சம்பவம் உல்டாவாக நடந்திருக்கின்றது. அந்த நாடகத்தில் ராமன் மற்றும் ராவணனாக நடித்த இரண்டு நடிகர்கள் உண்மையிலேயே அடித்து தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
ராம்லீலா நாடகத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் போர் தொடங்கியது. அப்போது ராமனும் ராவணனும் அம்புகளை விட்டு சண்டையிட்டனர். அந்த சமயத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கம் எழுப்பப்பட்டது. அப்போது ராவணனாக நடித்த நபர் திடீரென்று ராமனை தள்ளி விடுகின்றார். அதனால் ராமன் ராவணனை அடிக்க முற்படுகின்றார்.
அப்போது ராமனை கீழே தள்ளி அவரை ராவணன் அடிக்க தொடங்குகின்றார். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்கள் இருவரையும் பிரித்துவிட்டு சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார்கள். இருப்பினும் தொடர்ந்து இருவரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இது தொடர்பான வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் புராண கதையையே மாற்றி விட்டார்கள் என்று கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.
गजब हाल है, किरदार निभाते समय अब धैर्य नहीं रहा…मंच पर असल में लड़ पड़े राम-रावण
यूपी के अमरोहा में विजयदशमी के दिन रामलीला मंचन के दौरान श्रीराम और रावण बने कलाकारों के बीच मारपीट हो गई
जिससे वहां हंगामा खड़ा हो गया, इसके बाद रामलीला का मंचन रोक दिया गया, अब वीडियो वायरल हो… pic.twitter.com/0hQONjRDj5— आदित्य तिवारी / Aditya Tiwari (@aditytiwarilive) October 13, 2024