Cricket
நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி காட்டி இந்திய அணியின் வெற்றிக்கு பல இடங்களில் காரணமாக இருந்து வருபவர் ஆல்-ரவுண்டர் ரவீந்தர ஜடேஜா.
சமீபத்தில் பங்களாதேசுடன் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டி தொடரின் ஆட்டத்தில் இந்திய அணி தடுமாறி நின்ற போது தனது அசத்தலான பேட்டிங்கினால் போட்டியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தார் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் அஷ்வின். அப்போது அவருக்குத் துணையாக களத்தில் நின்று தனது பொறுமையான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார் ரவீந்திர ஜடேஜா.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடந்து வரும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தனது அபார சுழற்பந்து வீச்சு திறமையை காட்டி நியூஸிலாந்து வீரர்கள் கட்டுக்குள் இருக்க காரணமாக மாறியிருக்கிறார் இன்று ஜடேஜா.
65 ஓவர்கள் நிறைவடைந்த நேரத்தில் 22 ஓவர்களை வீசியிருக்கிறார் ஜடேஜா மட்டும். அவர் பந்து வீசிய 22 ஓவர்களில் 65 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் அவர்.
நியூஸிலாந்து அனியின் டாம் பிளன்ட,.க்ளேன் பிலிப்ஸ், இஷ் ஷோதி, மேட் ஹென்றி, வில்யங் இந்த ஐந்து பேட்ஸ்மேனகள் இன்றைய போட்டியில் தங்களது விக்கெட்டினை ரவீந்தர ஜடேஜாவிடம் பறி கொடுத்து இதுவரை அவுட் ஆகி உள்ளவர்கள்.
இவருக்கு அடுத்த படியாக வாஷிங்டன் சுந்தர் 18.4 ஓவர்கள் வீசி 81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
65.4 ஓவர்கள் நிறைவடைந்திருந்த நேரத்தில் 235 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை நிறைவு செய்துள்ளது நியூஸிலாந்து.