latest news
அண்ணனுக்காக ஆம்ஸ்ட்ராங்கை பழி தீர்த்தோம்!. சரண்டர் ஆன ஆற்காடு பாபு வாக்குமூலம்…
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் அவரின் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த 6 பேர் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். கழுத்து, தலை ஆகிய இடங்களில் வெட்டுப்பட்டு ஆம்ஸ்ட்ராங்க் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிவிட்டு பைக்கில் சிலர் தப்பி செல்லும் வீடியோவும் வெளியானது. எனவே, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு தப்பி சென்றவரை போலீசார் தேடி வந்தனர். அந்நிலையில்தான், இது தொடர்பாக ஆற்காடு பாலு உட்பட 8 பேர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர்.
ஆற்காடு சுரேஷ் என்பவரின் தம்பிதான் ஆற்காடு பால். சுரேஷ் கடந்த வரும் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதற்கு காரணம் ஆம்ஸ்ட்ராங் என நினைத்தே அவரின் தம்பி பாபு இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக போலீசாரிடம் பாபு அளித்துள்ள வாக்குமூலத்தில் ‘ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் தனக்கு மிரட்டல் விடுத்ததால் என் மனைவி என்னை விட்டு பிர்ந்துவிட்டார். தென்னரசு கொலை வழக்கில் என்னோடு சிறையில் இருந்தவர்கள், என் அண்ணன் சுரேஷின் கிளப்பில் வேலை செய்தவர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்களோடு சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம். எனது அண்ணன் இறந்து அவரின் முதலாம் நினைவு நாள் வருவதற்குள் ஆம்ஸ்ட்ரங்கை கொல செய்ய திட்டமிட்டோம்’ என பாபு கூறியிருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையும், குற்றப்புலனாய்வு பிரிவும் 3 முறை எச்சரிக்கை செய்தும் செம்பியம் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. எப்போதும், தனது ஆதரவாளர்களுடன் இருக்கும் ஆம்ஸ்ட்ராங் தனியாக இருக்கும் நேரத்தை கண்காணித்து அவரை கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.