Categories: latest newstamilnadu

கோட் படத்துக்கு கேட்…நோ கட்-அவுட்?…நோ பேனர்?…

தமிழ வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தளபதி’ என செல்லமாக அழைக்கப்படுபவருமான நடிகர் விஜய் நடித்துள்ள “கோட்” படம் வருகிற ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் ரீலீஸாக உள்ளது. அரசியல் பிரவேசம் மேற்கொண்ட பிறகு ரிலீஸாக உள்ள விஜயின் முதல் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

தனது கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகர் விஜய். சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சிகளில் மத்திய அரசை ஒன்றிய அரசு என சுட்டிக்காட்டி பேசி நீட் தேர்வு குறித்த தனது எதிர்ப்பு குரலை பதிவு செய்திருந்தார் விஜய்.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவர உள்ள “கோட்” படத்தை வரவேற்று ரசிகர்கள் பேனர் மற்றும் கட்-அவுட் வைப்பதற்கு இது வரை அனுமதி வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

banner

இது குறித்த செய்தியை பிரபல தமிழ் மாலை நாளிதழ் ஒன்று  வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தியேட்டர்களில் பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.

தங்களது விருப்ப நடிகர்களின்  படங்கள் வெளியாகும் போது பேனர்கள், கட்-அவுட்கள் வைத்து படங்களை வரவேற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதை வழக்கமாக வைத்து இருக்கின்றார்கள் ரசிகர்கள்.

இப்படிப்பட்ட நிலையில் படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் தியேட்டர்களில் பேனர் வைத்து “கோட்” படத்தை வரவேற்று கொண்டாட முடியாமலேயே போய் விடுமா? என்ற அச்சம் நடிகர் விஜயின் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

நடிகர் விஜயின் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வலை தளங்களில் கொட்டித்தீர்த்து வருவதாகவும் நாளிதழில் வெளியிட்டுள்ள செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

sankar sundar

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago