Connect with us

Cricket

சிங்கம் இறங்குனா காட்டுக்கு விருந்து… வலைப்பயிற்சியில் ரோஹித் சர்மா… இணையத்தில் கலக்கும் வீடியோ…!

Published

on

இந்தியா அணியின் கிரிக்கெட் கேப்டனான ரோகித் சர்மா வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.  நடந்து முடிந்த இந்த போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து t20 தொடர்களில் இந்திய அணி விளையாடுகின்றது. இந்த தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை நடைபெற இருக்கின்றது.

இதனை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 16-ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. இந்நிலையில் இந்த தொடருக்காக இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா தீவிரமாக வலைப்பயிற்சியில் இறங்கி இருக்கின்றார்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றுதான் கூற வேண்டும். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற வெறியில் ரோகித் சர்மா இறங்கி இருக்கின்றார். இதனால் தீவிர வலை பயிற்சியில் ரோகித் சர்மா ஈடுபட்டு வருகின்றார்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த போட்டியை தொடர்ந்து ரோகித் சர்மா ஐந்து நாள் கொண்ட ஆஸ்திரேலியக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கின்றார். ஆனால் அந்த போட்டியில் முதல் 2 போட்டிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும், அதற்கு அடுத்து நடைபெறும் 3 போட்டிகளில் ரோஹித் சர்மா கலந்து கொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த இரண்டு போட்டிக்கு பும்ரா கேப்டனாக இருந்து இந்திய அணியை வழி நடத்துவார் என்று பிசிசிஐ தெரிவித்திருக்கின்றது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *