Connect with us

Cricket

அவரை மாதிரி தான்.. விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய ரோகித் ஷர்மா..!

Published

on

Rohit Sharma Virat Kohli Featured Img

வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும், இறுதி நாளில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இன்டீஸ் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ்-இல் 438 ரன்களை குவித்தது.

பிறகு முதல் இன்னிங்ஸ்-ஐ தொடங்கிய வெஸ்ட் இன்டீஸ் அணி வெறும் 255 ரன்களை மட்டுமே குவித்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ்-ஐ ஆடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஜோடி அபாரமான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

Rohit Sharma 1

Rohit Sharma 1

இதன் காரணமாக இந்திய அணி இரண்டு விக்கெட் இழந்த போதிலும், அதிவேகமாக 181 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இன்டீஸ் அணி 365 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸ்-ஐ துவங்கியது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இன்டீஸ் அணி இரண்டு விக்கெட்களை இழந்து 76 ரன்களை குவித்து இருந்தது.

இந்த போட்டியில் விராட் கோலி விளையாடி விதம் பற்றி ரோகித் ஷர்மா புகழாரம் தெரிவித்து இருக்கிறார். ஐந்தாம் நாள் ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டது, போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. மழையால் வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணி தொடரை 0-1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

ஐந்தாம் நாள் முடிவில் பேசிய ரோகித் ஷர்மா விராட் கோலி மற்றும் அவரை போன்ற வீரர்கள் அணியில் இருப்பது பற்றி பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது..,

Rohit Sharma

Rohit Sharma

“டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ்-ஐ சீராக வைத்துக் கொள்ள விராட் கோலி போன்ற வீரர்கள் தேவை. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எல்லாவற்றின் கலவையும் வேண்டும். எங்களிடம் டெப்த், வெரைட்டி உள்ளது. நாங்கள் சரியான இடத்தில் இருக்கிறோம். பணியை சிறப்பாக செய்து முடிப்பதில் தான் இருக்கிறது.”

“அணியாக முன்னேறுவதில் தான் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு பிறகும் இதையே நான் சொன்னேன். நாங்கள் தொடர்ந்து நல்ல கிரிக்கெட் விளையாடி வந்திருக்கிறோம். இதில் மட்டும் தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். போட்டியின் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த விரும்புகிறோம்.”

“நாங்கள் சிறப்பான ஃபீல்டிங் செய்யும் அணியாக இருக்க விரும்புகிறோம். பவுலர்கள்- கடினமான சூழலில் எப்படி செயல்படுகின்றனர். கடினமான சூழலில் பேட்டர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர். இது போன்ற விஷயங்களை தான் நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். இஷான் போன்றவர்கள் அணியில் தேவை. அதிவேகமாக ரன்கள் தேவைப்பட்டது. அவரிடம் கொஞ்சமும் பயம் இல்லை. அவர் தான் முதலில் கைக்கொடுத்தார்,” என்று தெரிவித்துள்ளார்.

google news