Finance
பங்கு சந்தைஷேர் மார்க்கெட் டிமேட் அக்கவுண்ட்ஸ்!…தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?…
டிமேட் கணக்குஇந்தியப் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு, வசதியான, பாதுகாப்பான மற்றும் திறமையான பரிவர்த்தனை முறையை வழங்குவதற்கு டிமேட் கணக்குகள் அவசியமானதாக இருந்து வருகிறது. டிமேட் அக்கவுண்ட்ஸ்கள் வர்த்தகம் செய்வதை எளிதாக்குகின்றன, முதலீடுகளைக் கண்காணிக்கின்றன மற்றும் முதலீட்டாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றது.
இதற்கு எடுத்துக்காட்டாக, பங்குகளை வாங்க விரும்பும் முதலீட்டாளர் ஒரு டீமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும், அதில் பங்குகளை வாங்கிய பிறகு டெபாசிட் செய்ய வேண்டும். இந்த டிஜிட்டல் செயல்முறை உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை நிர்வகிப்பதையும் பெறுவதையும் எளிதாக்குகிறது.
கடந்த மாத நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 11.45 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஓராண்டில் மட்டும் 43% அதிகரித்துள்ளதாக மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) புள்ளி விவரம் கூறுகிறது.
ஆனாலும் உலகின் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு பார்த்தால் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் டிமேட் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 8 சதவீதமாகத்தான் உள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்லுகிறது . டிமேட் கணக்கு வைத்திருப்பவர்களில் அதிக அளவாக 2.31 கோடியுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
நாட்டின் பொருளாதாரத் தலைநகராக மும்பை இருந்து வரும் காரணத்தால் மகாராஷ்ட்ரா முதலிடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அம்மாநிலத்திற்கு அடுத்தபடியாக குஜராத் மாநில வாசிகளிடம் 18 கோடி டிமேட் கணக்குகள் இருப்பதாகவும் தெரியபடுத்தப்பட்டிருக்கிறது. உத்தர பிரதேசம் இந்தப் பட்டியலில் 1.04 கோடி கணக்குடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்த 3 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 1 கோடிக்கும் மேல் டிமேட் கணக்கு வைத்திருக்கின்றனர்.
ராஜஸ்தான், கர்நாடகா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தலா 50 லட்சம் முதல் 66 லட்சம் டிமேட் கணக்குகளை வைத்திருக்கின்றனர்.
இதில் தமிழ்நாடு 59.39 லட்சம் கணக்குகளுடன் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது. பிஹார், ஹரியானா, தெலங்கானா, கேரளா, பஞ்சாப், ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தலா 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்துள்ளனர்.
இதில் மிகக் குறைந்த அளவாக லடாக் யூனியன் பிரதேசத்தில் வெறும் 242 பேரிடம் மட்டுமே டிமேட் கணக்குகள் உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.