Connect with us

Finance

தங்கம் நோ சேஞ்ச்…வெள்ளியில் விலையில் வேரியேசன் இன்று… 

Published

on

Gold

சர்வதேச பொருளாதார சூழலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவை இரண்டும் தான் நாள் தோறும் தங்கத்தின் விற்பனை விலையினை உறுதி செய்து வருகிறது. இப்படி இருக்கையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்க இறக்கு மதி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது.

இதனால் தங்கத்தின் மீதான இந்திய சந்தையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தது. திடீர் சரிவினை கண்டு விலையில் ஏற்பட்ட மாற்றத்தால் நம்ப முடியாத ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது அன்மையில். இதே போலத் தான் வெள்ளியும் ஆனால் தங்கம் போல தடலாடி மாற்றங்களை கொடுக்காமல் சிறு, சிறு வித்தியாசங்களை காட்டியும் வந்தது.

இன்றைய சென்னை இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விற்பனை விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

Jewel

Jewel

நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ஐம்பத்தி இரண்டாயிரத்து நூற்றி அறுபது ரூபாய்க்கு (ரூ. 52,160/-) விற்கப்பட்டது. ஒரு கிராமின் விலை ஆறாயிரத்து ஐனூற்றி இருபது ரூபாயாக (ரூ.6520/-) இருந்தது.

நேற்றிருந்த இதே விலையில் தான் இன்றும் தங்கம் விற்கப்படுகிறது. வார இறுதி நாளான இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாதது கூட நகை பிரியர்களை நிம்மதி பெரு மூச்சு விட வைத்துள்ளது.

வெள்ளியின் விலை மட்டும் நேற்றைப் போல இல்லாமல் இன்று மாற்றம் கண்டுள்ளது. நேற்றை விட இன்று கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்த தொன்னூறு ரூபாய்க்கு (ரூ.90/-) விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை தொன்னூறாயிரம் ரூபாயாக (ரூ.90,000/-) உள்ளது.

google news