Cricket
இறுதிப் போட்டிக்கு போகப் போகும் அணி எது?…இன்னும் சிறிது நேரத்தில் துவங்க இருக்கிறது பலப்பரீட்சை…
பெண்கள் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி விறுவிறுப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. உலக சாம்பியன் யார்? என்பதனை முடிவு செய்யும் இறுதிப்போட்டிக்கு தகுதியாகக் கூடிய முதல் அணி எது என்பதை முடிவு செய்யப்போகும் முதல் அரை இறுதிப் போட்டி இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு துவங்க உள்ளது.
பெண்கள் கிரிக்கெட் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடர் ஐக்கிய அரபு எமீரகத்தில் வைத்து நடந்து வருகிறது. இரண்டு க்ரூப்புகளாக பிரிக்கப்பட்ட அணிகள் தகுதி சுற்றுப் போட்டிகளில் விளையாடின. க்ரூப் – ஏ வில் இடம் பெற்றிருந்த அணிகள் அவர்களுக்குள்ளேயும், க்ரூப் – பி யில் இடம் பிடித்திருந்த அணிகள் அவர்களுக்குள்ளேயும் மோதிக் கொண்டன.
நியூஸிலாந்து அணி பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியதை அடுத்து இந்திய அணியுஹ்ன் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. அரை இறுதியில் கூட நுழைய முடியாமல் போனது. லீக் சுற்று ஆட்டத்தோடு தொடரை விட்டு வெளியேற்றப் பட்டது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி. லீக் சுற்று போட்டிகளில் நான்கு போட்டிகளில் விளையாடிய இந்திய அணி இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் அடைந்தது. க்ரூப் – ஏ விலிருந்து ஆஸ்திரேலியாம் நியூஸிலாந்து ஆகிய அணிகளும், க்ரூப் – பி யிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கவும் அரை இறுதிப் போட்டிகளுக்கு தேர்வானது.
அரை இறுதிப் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் பலமிக்க ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்க அணி. இந்த போட்டி இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு துபாயில் பெத் மூனி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், லாவ்ரா வால்வார்டி தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டி பரபரப்பானதாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.
நியூஸிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரை இறுதிப் போட்டி நாளை துபாயில் வைத்து நடக்க இருக்கிறது.வருகிற இருபதாம் தேதி உலக் கோப்பையை வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தினை வெல்லப் போவது யார் என்பதனை நிர்ணயிக்கக் கூடிய இறுதிப் போட்டி இரவு ஏழு முப்பது மணிக்கு துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறஅ இருக்கிறது.