Connect with us

latest news

செந்தில் பாலாஜிக்கு செக்…நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்…

Published

on

Senthil Balaji

சட்ட விரோதமாக பணப் பறிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த வழக்கிலிருந்து தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இதே கோரிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திலும் முன் வைத்தது செந்தில் பாலாஜி தரப்பு.

சென்னை உயர்நீதி மன்றமும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டுள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

செந்தில் பாலாஜியின் நீதி மன்றக் காவல் இன்றோடு முடிவடையும் நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கானொளி மூலமாக நீதிபதி அல்லி முன்னிலையில் ஆஜரானார்.

இந்த வழக்கின் மீதான விசாரணையானது வருகிற ஐந்தாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Senthil Balaji Ex-Minister

Senthil Balaji Ex-Minister

செந்தில் பாலாஜி வழக்கு மீதான விசாரணையை இந்த மாதம் ஐந்தாம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார் நீதிபதி அல்லி.

கரூர் சிட்டி யூனியன் வங்கியைச் சேர்ந்தஅப்போதைய  மேலாளர் ஹரீஸ் குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். செந்தில் பாலாஜி தரப்பு அவரிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.  இந்த குறுக்கு விசாரணை முடியாததால் இந்த வழக்கின் மீதான விசாரணையானது செப்டம்பர் ஐந்தாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் செந்தில் பாலாஜியின் நீதி மன்றக் காவல் இன்றோடு சேர்த்து இதுவரை ஐம்பத்தி எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

google news