latest news
அடப்பாவிகளா… இதுலயும் மோசடியா – வங்கிக்கு எதிராகப் பொங்கும் மக்கள்!
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் செயல்படும் இந்தியன் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள், மீட்கப்படும்போது எடை குறைந்து காணப்படுவதாக ஊழியர்கள் மீது மக்கள் மோசடி புகார் அளித்திருக்கிறார்கள்.
பிள்ளையார்பட்டியை அடுத்த நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம் – காளிமுத்து தம்பதியினர். பிள்ளையார்பட்டி இந்தியன் வங்கியில் 3 லட்சத்து 10 மதிப்பிலும், மகள் பெயரில் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் நகைகளை அடகு வைத்திருந்தனர். நகைகளை மீட்க மாணிக்கம் சென்றிருக்கிறார். அப்போது நகைகளின் எடையை சரிபார்த்தபோது, மாணிக்கம் பெயரில் வைக்கப்பட்டிருந்த 2 சவரன் நகை ஒன்று ஒரு சவரன்தான் இருந்திருக்கிறது.
இதுகுறித்து கேட்டபோது வங்கி ஊழியர்கள் மழுப்பலாகப் பதில் சொல்லியிருக்கிறார்கள். அடகு வைக்கும்போது 16 கிராம இருந்த நகை, மீட்கும்போது 10.8 கிராம் மட்டுமே இருந்ததாகக் குற்றம்சாட்டுகிறார்கள். அதேபோல் மகள் பெயரில் வைக்கப்பட்ட 3 சவரன் பிரேஸ்லெட் ஒரு சவரன் அளவுக்கு எடை குறைந்திருப்பதாகவும் நகையின் வீடியோ ஆதாரத்தோடு மாணிக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதேபோல், அதேகிராமத்தைச் சேர்ந்த நடராஜன் – சின்னம்மாள் தம்பதியினரின் நகையில் 5 கிராம் 300 மில்லி அளவுக்கு எடை குறைந்ததும் புகாராகியிருக்கிறது. இதுதவிர அதே கிராமத்தைச் சேர்ந்த மேலும் சிலரும் வங்கி ஊழியர்கள் மேல் புகார் அளிக்கவே, போலீஸார் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: `நம்பிட்டா… நீயே வேணாம்னு சொல்றவரைக்கும் விட மாட்டார்’ – தோனி குறித்து நெகிழ்ந்த அஷ்வின்