india
கதைகளையே மிஞ்சும் சம்பவம்… 40 நாட்களில் 7 முறை பாம்பு கடி… சனி, ஞாயிறுகளில் மட்டுமே இது நடக்குதாம்…!
பாம்பு வஞ்சகம் வைத்து பழிவாங்கும் என்று கதைகளில் கேள்விப்பட்டிருக்கும் கதைகளை மிஞ்சும் அளவிற்கு ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தை சேர்ந்த சவுரா கிராமத்தில் உள்ளவர் தூபே . இவரை கடந்த 40 நாட்களில் மட்டும் ஏழு முறை பாம்பு கடித்துள்ளது.
ஜூன் இரண்டாம் தேதி தூபே தனது வீட்டில் படுத்து கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். அதைத் தொடர்ந்து ஜூன் இரண்டாம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை ஆறு முறை பாம்பு கடித்து இருக்கின்றது. இந்த வீட்டில் இருந்தால் தான் பாம்பு கடிக்கின்றது என்று உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அங்கும் அவரை பாம்பு கடித்துள்ளது. மீண்டும் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று மீண்டும் அவரை பாம்பு கடித்துள்ளது .இது குறித்து அவர் கூறியதாவது தன்னை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன. அவை தன்னை கடிக்கும் என்பதை முன்கூட்டியே என்னால் உணர முடிகின்றது.
மேலும் ஒன்பதாவது முறை பாம்பு என்னை கடிக்கும் போது நான் இறந்து விடுவேன் என்று கனவில் பாம்பு கூறியது என்று தெரிவித்தார். இந்நிலையில் குணமாகி வீடு திரும்பிய அவரை இன்று சனிக்கிழமை பாம்பு கடித்துள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே மருத்துவமனையில் மீண்டும் மீண்டும் சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல்நிலை என்பது தற்போது மோசமாகி இருக்கின்றது. சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டுமே அவரை பாம்பு கடிக்கின்றது. அது எப்படி என்று பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.