india
வெறி நாய் கடித்து பதினெட்டு மாத குழந்தை பலி…சோகத்தில் உறைந்த இந்தியாவின் முக்கிய நகரம்…
செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பது மனித வாழ்வில் சகஜமான ஒன்றாக இருந்து தான் வருகிறது. வாய் பேச இயாலாத இந்த உயிரினங்களும் தங்களை வளர்த்து வரும் எஜமான்கள் மீது அதிக பாசம் கொண்டு இருந்தும் வருகிறது.
தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல இந்த ஜீவராசிகளை நினைத்து செல்லும் இடங்களுக்கெல்லாம் தங்களோடு அழைத்து செல்வதையும் பழக்கமாக பலரும் கடைபிடித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக நாய்கள் வளர்ப்பில் அதிகம் பேர் ஆர்வம் காட்டி வந்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் வீட்டில் உள்ள குழந்தைகள் வீட்டு வளர்ப்பு போலவே தெரு நாய்களும் இருக்கும் என்கின்ற அறியாமையில் அவற்றுடன் விளையாடத் துவங்கி விடுகிறார்கள். பல நேரங்களில் இது விபரீத விளைவுகளை தந்தும் விடுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையை தெரு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் நெஞ்சை பதைபதைக்கச் செய்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதிராபாத்தின் அருகே இருக்கும் புறநகர் பகுதியான ஜவஹர் நகரில் ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை தெருவில் விளையாடிக்கொண்டிருந்துள்ளது.
அப்போது அங்கே வந்த தெரு நாய்கள் குழந்தையை கடித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் குழந்தையின் தலை முடியை வாயில் கவ்வியவாரே சிறிது தூரத்திற்கு இழுத்துச்சென்றுள்ளது. அதனை தொடர்ந்தும் குழந்தையை கடித்து வந்துள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் நாய்களை விரட்டி அடித்து குழந்தையை மீட்டு பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு சிகிட்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தெரு நாய்கள் கடித்து பதினெட்டு மாதங்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.