Connect with us

india

சிக்கிமில் திடீர் நிலச்சரிவு… சிக்கிய 1000 சுற்றுலா பயணிகள்… மீட்கும் பணி தீவிரம்…

Published

on

Sikkim: வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பகுதிகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கியமாக சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக தலைநகர் கேங்டாக் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 310ல் நிலச்சரிவு காரணமாக கடுமையான போக்குவரத்து  இடைஞ்சல் உருவாகி இருக்கிறது.

இதனால் சிக்கிமில் சுற்றுலா சென்ற பயணிகள் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் அதிகமானோர் அப்பகுதியில் இருந்து வெளியேற முடியாத நிலை உருவாகி இருக்கிறது. லச்சங் கிராமத்தில் சிக்கி இருந்த சுற்றுலா பயணி பலர் மீட்கப்பட்டு மங்கன் பகுதியில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது போக்குவரத்துக்கு ஏதுவாக சாலையை சீர் செய்ய அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். அதே நேரத்தில் ஆங்காங்கே தனியாக சிக்கி இருக்கும் சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு கேங்க்டாக் பகுதிக்கு அழைத்து வரப்படுகின்றனர். சாலை சீர் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப எல்லா ஏற்பாடும் செய்து கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 96 வயது காதலியை கரம் பிடித்த 100 வயது முதியவர்!.. ஒரு சுவாரஸ்ய சம்பவம்!..

google news