india
இனி சாப்பாடு மட்டும் அல்ல… விரைவில் இதுவும் ஹோம் டெலிவரி… ஸ்விக்கி, சொமேட்டோ எடுத்த அதிரடி முடிவு…!
பீர் மற்றும் ஒயின் போன்றவற்றை ஸ்விக்கி, zomato மூலமாக ஆன்லைன் டெலிவரி செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்தியாவில் இருக்கும் பல மக்கள் தங்களது விருப்பமான உணவுகளை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகிறார்கள், இந்தியா மட்டுமல்ல உலக அளவில் ஆன்லைன் புட் ஆர்டர் மற்றும் டெலிவரி என்பது தற்போது மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இந்த துறையில் இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது வர்த்தகங்களை விரிவாக்கம் செய்து வருகிறார்கள்.
இந்த நிறுவனங்களின் உணவு கட்டணம் போக தங்களின் சேவைக்கான கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று கொள்கிறார்கள். உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் தங்களது முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தையும், வருமானத்தையும் ஈட்டி கொடுக்கின்றது. இதனால் பல்வேறு முயற்சிகளை இந்தியாவில் தற்போது இந்த நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
தற்போது உணவு மட்டுமே ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்பட்டு வரும் நிலையில் இதற்கு அடுத்து பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக இருக்கும் மதுபான வகைகளையும் ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்விக்கி, zomato மற்றும் பிக் பாஸ்கெட் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலமாக இதனை வீடுகளில் டெலிவரி செய்ய அந்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது கர்நாடகா, அரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா மாவட்டங்களில் இதனை விரிவுபடுத்த அந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளனர்.