Connect with us

latest news

அவையில் இருந்து கேட்க விரும்பாதவர்கள் இந்த வீடியோவை காணலாம்… அதிரடி காட்டிய தமிழக முதல்வர்…

Published

on

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தினை சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை காரணம் காட்டி அதிமுக உறுப்பினர்கள் இன்று சட்டச்சபையில் அமளியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அவர்களை அவை காவலர்கள் சபாநாயகர் உத்திரவின் பேரில் வெளியேற்றினர்.

இதையடுத்து திமுக அரசு கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேச விரும்பவில்லை என அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்த நிலையில் தான் ஓடி ஒளிபவன் இல்லை. அந்த விவகாரத்தில் தமிழக முதல்வராக என்னவெல்லாம் செய்தார் என்று சட்டசபையில் பேசிய வீடியோவை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த ட்வீட்டில், கேள்வி நேரம் முடிவுற்றதும் சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும். இது அதிமுக உறுப்பினர்கள் அறிந்தது தான். வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை செய்துள்ளனர். முதலமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டும் என சொன்னவர்களுக்கு எங்கும் ஓடி ஒளியாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன்.

சட்டசபையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் காணொளியில் தெரிந்து கொள்ளட்டும். இந்த வீடியோவில் இருந்து, கள்ளக்குறிச்சியில் நடந்தது துயரமான சம்பவம். இச்சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜ் காவல்துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அவரிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இது புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சம்மந்தப்பட்ட அமைச்சரை அனுப்பி இருக்கிறேன்.

20ந் தேதி காலையில் உயர் அதிகாரிகளுடன் அவசர கூட்டம் நடத்தினேன். அமைச்சர்கள் ஏவா வேலு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன் உள்ளிட்ட மூவரை கள்ளக்குறிச்சிக்கு அனுப்பினேன். உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியை நேரில் சென்று அறிக்கை கொடுக்க சொல்லி இருக்கிறேன். அவர்கள் அறிக்கை கொடுத்த பின்னர் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தற்கால பணியிட நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். பொறுப்பாளர்கள் பலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. நான் ஓடி ஒளிபவன் இல்லை. அதிமுக அரசு நடந்த போது கள்ளச்சாராயம் மரணம் பட்டியல் என்னிடம் உள்ளது. ஆனால் நான் அரசியல் பேச விரும்பவில்லை எனவும் பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் ட்வீட்டை காண:  https://x.com/mkstalin/status/1804084960183099671

google news