Connect with us

latest news

இன்னைக்கு மிஸ்ஸே ஆகாது… ஜூலை மாதம் டமால், டுமில் தான்… வெதர்மேன் சொன்ன அசத்தல் ரிப்போர்ட்!..

Published

on

நேற்று தமிழகத்தில் பல பகுதிகளில் மலை வெளுத்து வாங்கிய நிலையில் சென்னையில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை நேற்று இரவு முழுவதும் கொட்டி தீர்த்து விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து இருக்கின்றார்.

தமிழகத்தில் அதுவும் சென்னையில் நேற்று பகல் பொழுதில் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கடுமையான புழுக்கம் இருந்தது . அதைத் தொடர்ந்து நேற்று இரவு குளிர்ந்த காற்று வீசு தொடங்கி கனமழை கொட்டி தீர்த்து விட்டது. இடி மின்னலுடன் மலை வெளுத்து வாங்கியதால் வானிலை இதமான சூழலுக்கு மாறியது .

விட்டுவிட்டு பெய்த மழையால் சென்னை வளசரவாக்கம், கோடம்பாக்கம், போரூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதை தொடர்ந்து மழை குறித்து தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டு இருக்கின்றார். அதில் ஜூலை மாதத்தில் பெய்ய வேண்டிய மொத்த மழையின் அளவு 10 சென்டிமீட்டர்.

அதில் நேற்று பெய்த மழையில் ஒரு மணி நேரத்திலேயே 6 cm மழை பதிவாகிவிட்டதாக கூறியிருந்தார். ஜூன் மாதம் 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் தான் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது என்று தெரிவித்தார். மேலும் நேற்று அவர் வெளியிட்ட பதிவில் இன்று மிஸ் ஆகாது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிக்களில் ஜூலை மாதம் டமால் டுமீல் என்று மழை தொடங்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போலவே நேற்று இரவு நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அது மட்டும் இல்லாமல் கும்மிடிப்பூண்டி, தாம்பரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம் ரோகித் டி20 சாதனையை சமன் செய்ததாக மிகவும் கிண்டலாக கூறி இருந்தார். அதிவேகமாக 50 அடித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 30 நிமிடங்களுக்குள் 50 மில்லி மீட்டர் அடித்து ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்து விட்டது என்று அவர் பதிவிட்டு இருந்தார்.

google news