latest news
உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா..? நோயாளியை வெளியில் துரத்திய அரசு மருத்துவமனை ஊழியர்கள்…!
சிறுநீர் கழித்ததாக கூறி நோயாளியை அரச மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் துரத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
தென் மாவட்டங்களிலேயே மதுரை ராஜாஜி மருத்துவமனை தான் மிகப்பெரிய மருத்துவமனையாகும். இங்கு தினமும் 3000 மேற்பட்ட வெளி நோயாளிகளும் 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை என்று பல்வேறு வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றது. கூடுதல் கட்டிடங்கள், படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றது.
அது மட்டும் இல்லாமல் தலையில் காயம், விபத்து, சிகிச்சை, உயிர் காக்கும் பிரிவு என்று பல பிரிவுகள் இந்த மருத்துவமனையில் இருக்கிறார்கள். தினமும் 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டம் விலாஞ்சேரி பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளரான காட்டுமாரி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை பகுதிக்கு சென்றிருந்தபோது வாகன விபத்தில் சிக்கி இருக்கின்றார்.
இதில் அவரது மார்பு, கால் மற்றும் மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவரைப் பார்த்துக் கொள்வதற்கு மருத்துவமனையில் யாரும் இல்லாத காரணத்தினால் படுக்கை அறையிலேயே சிறுநீர் மற்றும் இயற்கை உபாதை கழித்ததாக கூறப்படுகின்றது. இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் காட்டுமாரியை அடிக்கடி வந்து தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். பின்னர் அவரை அங்கிருந்து வெளியேற்றி பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.