latest news
ஆம்ஸ்ட்ராங் படுகொலை… சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல… வி.சி.க. தலைவர் திருமாவளவன்…!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நபர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல என்று திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் நேற்று பெரம்பலூரில் புதிதாக கட்டி இருந்த அவரின் வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆம்ஸ்ட்ராங் மட்டும் இல்லாமல் அவருடன் இருந்த மேலும் இருவரையும் மார்பு நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை கிரீன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டார்கள். இதைத்தொடர்ந்து சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகின்றது. ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று காலை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த வழக்கில் எட்டு பேர் போலீசில் சரண் அடைந்தார்கள். ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்ளிட்ட எட்டு பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன்பு சரணடைந்தார்கள். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பார்த்தபின் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது
“ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க இருக்கின்றோம். இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை.
அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களை தூண்டி விட்டார்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். சரணடைந்தவர்களை கைது செய்து விட்டோம் என்ற அளவிலேயே புலன்விசாரணையை நிறுத்திக் கொள்ளாமல், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றார்.