latest news
திருவண்ணாமலையில் ரூ.1000 லஞ்சம்… வருவாய் ஆய்வாளரை தொக்காக தூக்கிய காவல்துறை…
தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புக்கு போர்க்கொடி பலர் தூக்கினாலும் தொடர்ச்சியாக தங்களுடைய அரசு வேலைகளுக்கு லஞ்சம் வழங்குவதை தொடர்கதையாக வைத்துள்ளனர். ஆனால் சிலர் இதை தைரியமாகவும் கையாளும் நிகழ்வும் அவ்வப்போது நடந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் கிராமத்தில் பெண் வருவாய் ஆய்வாளராக பாரதி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த பழனிசாமி என்ற விவசாயி வாரிசு சான்றிதழ் கேட்டு வந்து இருக்கிறார்.
ஆனால் வருவாய் ஆய்வாளர் 1000 லஞ்சமாக கேட்டு இருக்கிறார். ஆனால் விவசாயி பழனிசாமி கொஞ்சமும் யோசிக்காதவர். இந்த விஷயம் குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துவிடுகிறார். அவரிடம் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டை கொடுத்து அதிகாரிகள் அனுப்பி இருக்கின்றனர்.
விவசாயி பழனிசாமியும் இதை வருவாய் ஆய்வாளரிடம் கொடுக்க அவர் சரியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கைது செய்யப்பட்ட ஆய்வாளர் பாரதியை தற்போது அதிகாரிகளால் மேற்கொண்டு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது, தமிழக அரசு தீர்மானத்தை வரவேற்கிறேன்.. தவெக தலைவர் விஜய்..!