Connect with us

india

குவைத் கட்டிடத்தில் தீ விபத்து நடந்தது எப்படி? 43 இந்தியர்களின் உயிரை காவு வாங்கிய அதிகாலை அகோரம்…

Published

on

Kuwait: குவைத்தில் ஏற்பட்ட கட்டிட தீ விபத்தால் பலர் உயிரிழந்த நிலையில் இதில் 43 பேர் இந்தியர்கள் என்ற தகவலால் பலர் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். திடீரென இப்படி ஒரு பெரிய விபத்து நடந்த காரணம் குறித்த முக்கிய தகவலும் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாடு உட்பட ஏகப்பட்ட இந்தியர்கள் குவைத் சென்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கம்பெனி தரப்பில் இருந்து பெரிய கட்டிடம் வாடகை எடுத்து இந்தியர்களை தங்க வைத்து இருக்கின்றனர். இதேப்போல தான் தெற்கு குவைத்தில் இருக்கும் அகமதி கவர்னரேட்டுல் நிறைய இந்தியர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், என்டிபிசி நிறுவனம் சார்பில் இந்தியர்களை உட்பட ஊழியர்களை தங்க வைக்க 6 மாடி கொண்ட கட்டிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டிடத்தில் தான் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இந்தியர்கள் உட்பட 195 பேர் தங்கி இருக்கின்றனர்.

இதில் அதிகாலை பணியளவில் இருந்த 20 பேர் அறையில் இல்லை. இந்த நிலையில் தான், எகிப்தை சேர்ந்த தொழிலாளர் ஒருவரின் 4ம் நம்பர் பிளாக் தரைதளத்தில்  இருந்ததாம். அந்த அறையில் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்ததே இந்த விபத்துக்கு காரணமாகி இருக்கிறது.

அதிகாலை என்பதால் தொழிலாளர்கள் தூக்கத்தில் இருந்தனர். அவர்களால் உடனே எழுந்திரிக்க முடியாத நிலை இருந்தது. மேலும் சுதாரித்த பின்னர் தீ மற்றும் புகையால் அவர்கள் பாதிக்கப்பட்டதும், அதிக உயிரிழப்புக்கு காரணமாகி இருக்கிறது. மொத்த தரைத்தளமும் தீயில் கருகியது. இதை தொடர்ந்து தீ மளமளவென பரவி மொத்த கட்டிடமும் புகை மண்டலமாகியது.

இதில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 50 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். உயிரிழந்த தொழிலாளர்களில் 47 பேர் இந்தியர்கள் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் 11 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: என் ஃப்ரண்டை போல யாரு மச்சான்… யானைகளின் விநோத செல்லப்பெயர் பழக்கம்!

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *