Connect with us

india

கோடிகளை குவிய வைத்த பக்தர்கள்…திடுக்கிட வைத்த திருப்பதி கோவில் உண்டியல் வசூல்…

Published

on

Tirupathi

இந்தியாவில் உள்ள மதவழிபாட்டு தளங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருப்பதி கோவில். ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கோவிலின் பிரதான கடவுளான வெங்கடேச பெருமானை தரிசிக்க இந்தியா முழுவதுமிருந்து பக்தர்கள் படையெடுப்பது பழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது.

தற்போது இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் இந்த கோவில் பிரசித்தி பெற்று வருவதால், உலகின் பல்வேறு மூலையிலிருந்தும் பக்தர்கள் திருப்பதியை நோக்கி வரத்துவங்கியுள்ளனர். தரிசனத்திற்காக வருவதோடு மட்டுமல்லாமல் தங்களது நேர்த்திக் கடனை செலுத்த இங்கே குவியும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் இக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், உண்டியல் காணிக்கை வசூல் விவரம், மற்றும் லட்டு விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி கடந்த மாதமான ஆகஸ்டில் மட்டும் 22.42 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல கடந்த மாதம் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.125.67 கோடியை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் செலுத்தி உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

Tirupati Laddu

Tirupati Laddu

திருப்பதி கோவிலின் முக்கிய பிரசாதமான லட்டிற்கென தனி மகத்துவம் இருந்து வருகிறது. ஏழுமலையானின் தரிசனத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுமோ அதைப் போலவே திருப்பதி கோவிலின் லட்டிற்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது திருப்பதிக்கு வரும் பக்தர்களால்.

இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ள திருப்பதி கோவில் லட்டுகளின் விற்பனை எண்ணிக்கையும் வெளியாகியுள்ளது. இதில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 1.08 கோடி லட்டுக்கள் விற்பனையாகியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

google news