Connect with us

india

திண்டுக்கல் நிறுவனம் மீது புகார்..திருப்பதி லட்டு விவகாரத்தில் திருப்பம்…

Published

on

Tirupati

திருப்பதி கோவில் பிரசாத லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை நாட்டையே உலுக்கியுள்ளது. திரைப்பட விழா ஒன்றில் லட்டு குறித்து பேசிய நடிகர் கார்த்தியை ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் கண்டிருத்திருந்த  நிலையில் தனது பேச்சு குறித்து மன்னிப்பு கோரியிருந்தார் கார்த்தி.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிய பொய்கள் மூலம் திருப்பதி கோவிலுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதற்காக மாநிலம் முழுவதும் வருகிற 28ம் தேதி பூஜை நடத்தப்பட உள்ளதாக ஒய்எஸ்ஆர் கட்சி சார்பாக நடத்தப்படும் என ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பாக திண்டுக்கல்லை சேர்ந்த நெய் விநியோகிக்கும் ஏ.ஆர். நிறுவனத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Ghee

Ghee

தரமற்ற பத்து லட்சம் கிலோ நெய் இந்த நிறுவனத்தின் மூலம் லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தான அதிகாரி கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வை புண்படுத்தும் விதமாகவும், உடல் நலக் கோளாறை விளைவிக்கும் விதமாகவும், மத்திய அரசின் அங்கீகாரமற்ற பரிசோதனை கூடத்தின் அறிக்கையை ஏற்று இந்த கொள்முதல் செய்யப்பட்டதாக தேவஸ்தானம் சார்பிலான மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரு கிலோ நெய்யை முன்னூற்றி பத்தொன்பது ரூபாய்க்கு தருவதாக கூறி, நான்கு டேங்கரின் மூலம் நெய் சப்ளை செய்யப்பட்டதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு தொடர்பான விவகாரத்தில் குண்டூர் சரக ஐஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு ஆந்திர அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புகார் அந்த குழுவிற்கு மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

திருப்பதி கோவிலுக்கு நான்கு நிறுவனங்களலிருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டு வரப்பட்டதாகவும், அதிலும் கலப்படம் கடந்த நெய்யை திண்டுக்கல்லை சார்ந்த நிறுவனத்தின் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *