Connect with us

latest news

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்!. உயிரிழப்பு 13ஆக உயர்வு…

Published

on

kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் வசித்த சிலர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

பலரும் ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் ஆகிய பிரச்சனைகளால் 50க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம், திருவண்ணாமலையில் இருந்தும் சிறப்பு மருத்துவர்கள் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிலர் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். கருணாபுரம் பகுதியில் வசிக்கும் 40க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் ஏ.வ.வேலு ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் வேகமாக கிடைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதோடு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

அதோடு, இந்த வழக்கு சிபிசிஐடி வசம் தமிழக அரசு ஒப்படைத்திருக்கிறது. இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கவும், மேல் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். 13 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *