latest news
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?!.. வாங்க பார்ப்போம்!….
பெட்ரோல், டீசல் என்பது மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு காரணம் மக்களிடம் வாகனங்கள் அதிகரித்துவிட்டது. எல்லோரிடமும் குறைந்த பட்சம் ஒரு இருசக்கர வாகனம் இருக்கிறது. இப்போது பலரும் மாத தவணைகளில் கார்களையும் வாங்குகின்றனர்.
எனவே, எரிபொருளின் தேவையும் அதிகரித்து வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் 60 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை தாண்டியது. 55 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலையும் 100ஐ நெருங்கியது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாறும் நிலைக்கு ஏற்பவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த 91 நாட்களாக பெட்ரோல், டீசலின் விலையில் மாற்றம் ஏதுவும் இல்லை. இன்றும் அதுவே நீடித்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.