Finance
ஓரே நாளில் உல்டாவான தங்கம் விலை…இப்பிடியே இருந்துட கூடாதா?…
தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் வித்தியாசம் இருந்து கொண்டே தான் இருக்கிறது பல ஆண்டுகளாக. நேற்றைய நிலை இன்று நீடித்தால் அது அதிசயம் என்றே தான் சொல்ல வேண்டும். விலையில் பல ஏற்ற, இறக்கங்களை தங்கம் சந்தித்து வந்தாலும் அதன் மீதுள்ள மோகம் அதிகரித்துக் கொண்டே தான் இருந்து வருகிறது.
தவிர்க்க முடியாத அத்தியாவசியமாக பார்க்கப்படுகிறது தங்க நகைகள் அணிவது சிலருக்கு. ஆடம்பரப் பொருளாக இருந்து வருகிறது மற்றொரு தரப்பிற்கு. அணிகலனாக எப்படி தங்கம் பர்க்கப்படுகிறதோ அதே போலத் தான் அதன் மீதன் வியாபார முதலீடும் இருந்து வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் மீதும் முதலீடு அதன் மூலம் லாபம் பார்த்து வரும் வணிகர்களும் இருந்து தான் வருகிறார்கள். சிலருக்கு தங்கத்தை வைத்து நடைபெறும் வியாபாரம் வாழ் வாதாரமாகவும் இருநக்கிறது.
நேற்று ஆடி மாத துவக்கத்தில் தங்கத்தின் விலையில் மிகப்பெரிய மாற்றம் இருந்தது. ஆனால் சென்னையில் இன்று விறகப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இறங்கு முகமாக மாறியுள்ளது.
நேற்றை விட இன்று கிராம் ஒன்றிற்கு தங்கம் பதினைந்து ரூபாய் (ரூ.15/_) குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ஆராயிரத்து தொல்லயிரத்து ஐந்து ரூபாயாக (ரூ. 6905/-) உள்ளது.
சவரன் ஒன்றிற்கு நூற்றி இருபது ரூபாய் (ரூ.120/-), குறைந்து ஐம்பத்தி மூவாயிரத்து இரு நூற்றி நாற்பது ரூபாயாக (ரூ.53,240/-)உள்ளது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் நேற்றை விட இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் முப்பது காசுகள் குறைந்து (ரூ.1.30/-) தொன்னூற்றி ஒன்பது ரூபாய் இருபது காசுகளுக்கு (ரூ.99.20/-) விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை தொன்னூற்றி ஒன்பதாயிரத்து இரு நூறு ரூபாயாக (ரூ.99,200/-) உள்ளது.