latest news
JEE தேர்வில் சாதனை படைத்த பழங்குடியின மாணவிகள்… திருச்சி NIT-யில் சீட்… பெருமை..!
JEE தேர்வில் பழங்குடியின மாணவிகளான ரோகினி, சுகன்யா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நடந்து முடிந்த JEE 2024 வது தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகினி, சுகன்யா ஆகியோர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடி-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
மேலும் இந்த தேர்வில் ரோகினி 73.8% மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய பழங்குடியின மாணவிகளின் முதலிடம் என்ற பெருமையை பிடித்திருக்கின்றார். மேலும் என்ஐடி இல் மாணவி ரோகிணிக்கு வேதிப்பொறியியலும், மாணவி சுகன்யாவுக்கு உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது பழங்குடியினர் இடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தங்களாலும் முடியும் என்பதை சாதித்து காட்டி இருக்கிறார்கள் பழங்குடியின மாணவிகள்.