Connect with us

Cricket

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

Published

on

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட் வாடிக்கையாக மாற்றி வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் போட்டியில் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை கடந்துள்ளார். ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை விராட் கோலி கடந்துவிட்ட நிலையில், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்த மைல்கல் மூலம் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்காரா, ரிக்கி பாண்டிங் வரிசையில் விராட் கோலி 1000 பவுண்டரிகளை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இதுதவிர தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இந்த சாதனை படைத்த மற்ற வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கான்பூர் டெஸ்ட் போட்டியை பொருத்தவரை, அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்தப் போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர் விராட் கோலி, வங்கதேசம் அணியின் ஷகிப் அல் ஹாசனுக்கு தனது பேட்-ஐ பரிசாக வழங்கினார்.

google news