Cricket
தோனியை ஓரங்கட்டிய ‘விராட் கோலி’… இருந்தாலும் அவர் சாதனையை யாரும் தொட முடியாதுல…!
முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்து விராட் கோலி 2-ம் இடம் பிடித்திருக்கின்றார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பெங்களூரில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்து இருக்கின்றது. இதனை அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி படுமோசமாக விளையாடி வெறும் 46 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இருப்பது இந்தியா செய்த மோசமான சாதனையாக பார்க்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்து இருக்கின்றார். அதாவது சர்வதேச அளவில் இந்திய அணிக்காக தோனி 535 போட்டிகளில் விளையாடி இருக்கின்றார்.
இன்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி விளையாடியதன் மூலமாக 536 போட்டிகளில் விளையாடி இந்த பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிரித்து இருக்கின்றார் விராட் கோலி. சர்வதேச அளவில் இந்திய அணிக்காக விளையாடியவர் பட்டியலில் யாரும் தொட முடியாத இடத்தில் இருப்பவர்தான் சச்சின் டெண்டுல்கர். அவர் இதுவரை 664 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் சாதனையை இது வரும் யாரும் தொடவில்லை.