Connect with us

Cricket

இந்தியா திரும்பிய உடனே மீண்டும் லண்டன் பறந்த விராட் கோலி.. என்ன நடந்தது தெரியுமா?

Published

on

டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நேற்று இந்தியா திரும்பியது. உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு பாராட்டு விழா நடந்த நிலையில் விராட் கோலி உடனே லண்டன் திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

2007ம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்றது. ஆனால் அதை தொடர்ந்து இந்திய அணிக்கு ஐசிசி டி20 கோப்பை கிடைக்கவில்லை. அதிலும் கடந்த வருடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பை பைனலில் தோல்வி, ஒருநாள் இறுதி போட்டியில் தோல்வி என இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சியாகவே அமைந்தது.

இந்நிலையில் தான் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸில் தொடங்கி நடந்தது. அதில் இந்திய அணி எல்லா போட்டிகளிலும் வெற்றி கண்டு இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்தித்தது. இதில் தென்னாப்பிரிக்கா 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது.

இதில் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் துல்லியமாக சிக்ஸ் பக்கம் போன பந்தை கேட்சாக பிடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதையடுத்து இந்திய அணி கோப்பையுடன் பார்படாஸில் இருந்து நேற்று இந்தியா திரும்பியது.

காலையில் இந்திய பிரதமர் மோடியை இந்திய அணி சந்தித்தது. அடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டனர். இந்திய வீரர்கள் பஸ்ஸில் விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து, இந்திய அணியின் முக்கிய வீரரான விராட் கோலி உடனே லண்டன் கிளம்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவரின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்படுகிறது. டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மட்டுமே அனுஷ்கா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news