Connect with us

Cricket

அம்மா என்னை பார்க்க வரல.. கோலியை பார்க்கத் தான் வந்தாங்க.. உண்மையை உடைத்த ஜோஷூவா டா சில்வா..!

Published

on

Joshua-Da-Silva-Featured-Img

இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதிய 100-வது போட்டியில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 76-வது சதத்தை அடுத்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரின் 29 ஆவது சதம் ஆகும். டிரினிடாட்-இல் வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் விராட் கோலி தனது சதத்தை கடந்தார்.

இரு அணிகள் இடையேயான 100-வது போட்டி மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விராட் கோலி களமிறங்கிய 500-வது போட்டி இது ஆகும். இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ்-இல் 438 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் விராட் கோலி 121 ரன்களை விளாசினார்.

Virat-Kohli

Virat-Kohli

விராட் கோலி சதம் அடிப்பதை காண, மைதானத்தில் அவரின் விசேஷமான விசிறி வந்திருந்தார். அது வெஸ்ட் இன்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர், பேட்டர் ஜோஷூவா டா சில்வா-வின் தாயார் ஆகும். இரண்டாம் நாள் போட்டி முடிந்ததும், இவர் விராட் கோலியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

மேலும் விராட் கோலியை பார்த்ததும், கண் கலங்கிய நிலையில், அவரை கட்டி அணைத்து கோலியின் கன்னத்தில் முத்த மழை பொழிந்தார். இந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோ வடிவில் சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக வைரல் ஆனது.

வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து ஜோஷூவா டா சில்வா, தனது தாயார் மைதானத்திற்கு வந்த சுவாரஸ்யத்தை மனம் திறந்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது..,

Virat-Kohli-1

Virat-Kohli-1

“எனது தாயார் என்னை தொடர்பு கொண்டு, விராட் கோலிக்காக போட்டியை காண வருவதாக தெரிவித்து இருந்தார், என்னால் அதை நம்ப முடியவில்லை. தான் விராட் கோலியை காணவே வந்ததாக அவர் என்னிடம் தெரிவித்தார். அவர் நான் விளையாடுவதை காண வரவில்லை என்று கூறியது வேடிக்கையாக இருந்தது.”

“அவர் பேருந்தில் ஏறிய பிறகு, இது நடந்தது. நான் பேருந்தின் ஜன்னலை தட்டி, அவரிடம் தகவல் தெரிவித்தேன். உடனே அவர் வந்து என் தாயாரை சந்தித்தார். அவர் எனது தாயாருக்கு மறக்க முடியாத நாளை ஏற்படுத்திக் கொடுத்தார்,” என்று தெரிவித்தார்.

ஜோஷூவா டா சில்வா களத்தில் பேசிய போது, ஸ்டம்ப் மைக்கில் பதிவான ஆடியோ வெளியானது. அதன் பிறகு தான், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

google news