india
ஏடிஎம் மிஷின்ல என்னென்ன வசதி இருக்குனு உங்களுக்கு தெரியுமா..? இதோ தெரிஞ்சிக்கோங்க..!
ஏடிஎம் மிஷினில் என்னென்ன வசதிகள் இருக்கின்றது அது எதற்காக பயன்படுகிறது என்பதைக் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பணம் வேண்டும் என்றால் நாம் வங்கிகளுக்கு சென்று எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் இருந்தது. காலம் செல்ல செல்ல ஏடிஎம் மெஷின் அறிமுகம் செய்யப்பட்டது. பணம் தேவை இருக்கும் போதெல்லாம் ஏடிஎம் சென்று நமக்கு வேண்டிய பணத்தை எடுத்து வந்தோம். ஆனால் தற்போது எல்லாமே ஆன்லைன்தான். தொடர்ந்து ஏடிஎம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது.
ஆனால் அந்த ஏடிஎம் மிஷினில் எவ்வளவு வசதிகள் நமக்கு இருக்கின்றது என்பதை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக பணத்தேவை இருக்கும் போது ஏடிஎம் மிஷினை பயன்படுத்தி நாம் எளிய முறையில் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். இதற்காக நாம் வங்கிகளுக்கு சென்று மணிகணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் நமது வங்கி கணக்கில் எவ்வளவு பணத்தொகை இருக்கின்றது என்பதையும் எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஒரு அக்கவுண்டில் இருந்து மற்றொரு அக்கவுண்டுக்கு டெபிட் கார்டு மூலமாக நாம் தினமும் 40,000 அனுப்பலாம்.
ஏடிஎம் மிஷின் மூலம் விசா கார்டின் பேலன்ஸையும் நாம் செலுத்தலாம். ஏடிஎம் பயன்படுத்தி இன்சூரன்ஸ் ப்ரீமியம் செலுத்த முடியும்.
செக் புக் தீர்ந்து விட்டால் ஏடிஎம் மையத்திற்கு சென்று செக் புக் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தால் நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு செக் புக் வந்து சேரும்.
ஏடிஎம் பின் நம்பரை நீங்கள் மாற்ற வேண்டுமென்றால் ஏடிஎம் மையத்திற்கு சென்று எளிதில் மாற்றிக் கொள்ளலாம். இப்படி பல்வேறு வசதிகளை ஏடிஎம் மெஷின் நமக்கு கொடுத்து வருகின்றது.