india
பவன் கல்யாணின் பக்கா ஸ்கெட்ச்… அல்வா போல கிடைத்த துணை முதல்வர் பதவி… நடந்தது என்ன?
ஜெகன் மோகன் ரெட்டியை தூக்கும் மனநிலையில் ஆந்திர மக்கள் இருந்தாலும் அதற்கு வலுவான எதிராளி தேவைப்பட்டனர். எங்கும் வாக்கு சிதறாமல் ஒரு கூட்டணி அமைந்தால் தான் ஜெகன் மோகன் அரசை தரை மட்டம் ஆக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆந்திர தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற முதலில் பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடுவை உள்ளே அழைத்து வந்தார். இதில் அவருக்கு சில சீட்கள் குறைந்தாலும் அதுகுறித்து அவர் கவலை படவில்லை. சேவ் தி ஸ்டேட் பிரம் ஜெகன் என தன் பிரச்சாரத்தை முழுவீச்சாக நடத்தினார். தேர்தலுக்கு முன்னரே தன்னுடைய அரசியல் நகர்வை சரியாக கையாண்டார்.
அதையடுத்து தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசத்துடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டு 175 இடங்களில் 135 இடங்கள் வென்றது. இதில் பவன் கல்யாண் கட்சிக்கு 21 இடங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி 25க்கு 21 இடங்களை வென்றது. இதை தொடர்ந்தே பவன் கல்யாண் துணை முதல்வரை பதவியை கேட்டு இருக்கிறார்.
அதற்கு சந்திரபாபு நாயுடு தரப்பும் ஓகே சொல்லியதை அடுத்து தற்போது அதிகாரப்பூர்வ துணை முதல்வராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி, வனத்துறை, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளத. ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் கட்சி மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடர்ந்து 5 நாட்கள் தமிழகத்தில் கனமழை!.. வானிலை மையம் முக்கிய அறிவிப்பு…