Cricket
வங்கதேசம் டெஸ்ட்.. ஸ்ரேயஸ் அய்யர், முகமது ஷமி சேர்க்காததற்கு இதுதான் காரணமா?
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் என முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதோடு யாஷ் தயால் முதல் முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி மற்றும் ஸ்ரேயஸ் அய்யருக்கு அணியில் இடமில்லை. துலீப் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், ஸ்ரேயஸ் அய்யர் அணியில் சேர்க்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அணி வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்ட நிலையில், ஸ்ரேயஸ் அய்யர் இல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தய நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி முழு உடற்தகுதியை நிரூபிக்காததால் அணியில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து வெளியான தகவல்களில், சிவப்பு பந்து கிரிக்கெட்டில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியது மற்றும் 2024 சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே ஸ்ரேயஸ் அய்யர் அணியில் சேர்க்கப்படாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் ஸ்ரேயஸ் அய்யர் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. சர்பராஸ் கான் மற்றும் கேஎல் ராகுல் இடையே மிடில் ஆர்டருக்கு பலமான போட்டி நிலவுகிறது. இதுவும் ஸ்ரேயஸ் அய்யர் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காததற்கு காரணமாக கூறப்படுகிறது.
முகமது ஷமியை தேர்வு செய்யப்படுவதற்கான டிக்மார்க் அனைத்தயும் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிகிறது. மேலும், அவர் வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஷமி இடம்பெறுவது சந்தேகத்திற்குரிய விஷயம் தான் என்று கூறப்படுகிறது.