புலிகளை நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்க காரணம் என்ன தெரியுமா?..

0
42

புலிகள் ஏன் நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது. ஜூலை 29 சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன் எதற்கு என்ற ஆச்சர்ய தகவல்களை வனத்துறை அதிகாரி விளக்கி இருக்கிறார்.

1973ம் ஆண்டு புலிகளை இந்திய நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் புலி இந்திய நாட்டின் பாரம்பரியத்தோடு ஒத்து போகும். மேலும் அதனுடைய சக்தி அதனுடைய சுறுசுறுப்பு அதுவும் காரணமாக கூறப்பட்டது. ஆனால் இதைப் போன்று மிகுந்த பலம் வாய்ந்த சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்காமல் ஏன் புலிகள் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் சிங்கங்கள் குஜராத் மாநிலத்தின் காடுகளில் மட்டுமே இருக்கும். ஆனால் புலி இந்தியாவில் 17 மாநிலங்களில் வாழ்ந்து வருகிறது. உலகம் அனைத்திலும் 13 நாடுகளில் மட்டுமே புலி தற்போது வாழ்ந்து வருகிறது. ரஷ்யா, சீனா, நேபாளம், கம்போடியா, பூட்டான் உள்ளிட்டா நாடுகளில் தான் புலி இன்னமும் இருக்கிறது.

உலகமெங்கும் இருக்கும் புலிகளில் 80% இந்தியாவில் மட்டுமே இருக்கிறது. சில நாடுகளில் சிங்கம் மட்டுமே இருக்கும். சில நாடுகளில் புலி மட்டுமே இருக்கும். ஆனால் இந்தியாவில் மட்டும் தான் சிங்கங்களும் உண்டு புலிகளும் உண்டு. புலிகளில் ஆறு வகை உண்டு. நம் நாட்டில் இருப்பது ராயல் பெங்கால் டைகர் தான்.

இந்தியாவில் மொத்தம் 3682 புள்ளிகள் 2022ம் ஆண்டு கணக்குபடி வாழ்ந்து வருகிறது. புலிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 24 புலிகள் காப்பகம் இருக்கிறது. இதில் தமிழகத்தில் ஐந்து காப்பகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மனிதர்களை போல புலிகளை அதன் உடல்வரிகளை வைத்து அடையாளப்படுத்தப்படும்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here