Connect with us

latest news

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு… எடப்பாடி பழனிசாமி கொடுத்த விளக்கம்!

Published

on

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளஎர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருக்கிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில் திமுகவே நேரடியாகக் களமிறங்கும் நிலையில், பாமகவும் நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டன. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவர் கூறுகையில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

அதுபோல, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களைப் பட்டியில் அடைப்பதுபோல் செய்து திமுகவினர் முறைகேடு செய்தனர். திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதால் விக்கரவாண்டி இடைத்த் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. சுதந்திரமாக இடைத் தேர்தல் நடக்காது என்பதால்தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது கனவு. அவரின் கனவு பலிக்காது. தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி மாறி மாறி கிடைக்கும்” என்று கூறினார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *