அரசுக்கு தெரியாமல் விற்ற கள்ளச்சாராயம் விஷமாகி கள்ளக்குறிச்சியை சேர்ந்த கருணாபுரம் பகுதியில் 49க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். எதனால் இத்தனை உயிரிழப்பு? சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் கொடுக்கும் ஆபத்துக்கள் குறித்த முக்கிய தகவல்கள்.
பொதுவாக சாராயத்தில் எத்தில் ஆல்கஹால் கலப்பதுதான் வழக்கம். இது உடனே பெரிய அளவில் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் எந்தவித பக்கவிளைவுகளையும் கொடுக்காது. ஆனால் சில நேரங்களில் கள்ளச்சாராயமாக விற்கப்படுவதில் மெத்தனால் கலப்பது அடிக்கடி நடந்து வருகிறது.
அதை வாங்கி குடிப்பவர்கள் அடுத்த சில மணி நேரங்களில் பெரிய அளவில் உடல் நல பாதிப்புகளை சந்திப்பதும். திடீரென இறந்தும் விடுகின்றனர். மெத்தனாலில் எத்திலை விட அதிக அளவில் நச்சுத்தன்மை இருக்கிறது. பல இடங்களில் மெத்தனால் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
உடை தயாரிப்பு, பிளாஸ்டிக் தயாரிப்பு, பெயிண்ட் தயாரிப்பு உள்ளிட்ட இடங்களில் தான் அதிகமாக மெத்தனால் பயன்பாடு இருந்து வருகிறது. உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே மெத்தனாலை முறையாக பயன்படுத்த முடியும். ஆனால் சிலர் சாராயத்தில் அதிக அளவில் போதை தரும் என இதை கலந்து விற்கின்றனர்.
இதனால் மெத்தனால் உடலுக்குள் சென்று நியூரான்களை பாதித்து உடனே உயிரிழப்புகளை ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு இது நிரந்தர பார்வை இழப்பையும் கொடுக்கிறது. மேலும் நரம்பு மண்டலங்களையும், நுரையீரலையும் அடுத்த சில மணி நேரங்களில் செயல் இழக்க வைத்து உயிரை எடுத்து விடும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அவையில் இருந்து கேட்க விரும்பாதவர்கள் இந்த வீடியோவை காணலாம்… அதிரடி காட்டிய தமிழக முதல்வர்…
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…