india
ரேஷன் பொருட்களை பெற்றோருக்கு கொடுக்க சொன்ன கணவர்!.. குழந்தைகளுடன் பெண் தற்கொலை!..
தற்கொலை என்பது உலகம் முழுவதும் நிகழும் ஒன்று. பல்வேறு காரணங்களுக்காக பலரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெரும்பாலும் மன உளைச்சல், தீராத சோகம், ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது. முக்கியமாக அந்த நொடி மனதில் எழுதும் முடிவாகவே தற்கொலை இருக்கிறது.
அந்த நிமிடத்தில் இருந்து தப்பித்துவிட்டால் தற்கொலை எண்ணத்தை தவிர்க்க முடியும். அதற்கு பல ஆலோசனை மையமும் இருக்கிறது. ஆனால், பலரும் அதை நாடுவதில்லை. தனக்கு நெருக்கமான ஒருவரை பழி வாங்கும் எண்ணம், மற்றும் அவரின் மீதுள்ள கோபமே பல நேரங்களில் தற்கொலைக்கு கொண்டு செல்கிறது.
இந்நிலையில், ரேஷனில் வாங்கிய பொருட்களை தனது கணவர் அவரின் பெற்றோருக்கு கொடுக்க சொன்னதால் எழுந்த சண்டையில் பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
ஷாகூர் கான் என்பவர் தனது மனைவி ரஹ்மத் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். சமீபத்தில், அவரின் ரேசன் கார்டுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டது. அதை தனது பெற்றோருக்கு கொடுக்கும்படி ஷாகூர் தனது மனைவியிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், அதற்கு அவரின் மனைவி ரஹ்மத் மறுத்திருக்கிறார்.
இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த ரஹ்மத் அருகில் இருந்த தண்ணீர் தொட்டி மீது ஏறி தனது குழந்தைகளுடன் அதில் குதித்துவிட்டார். இதில், தண்ணீரில் மூழ்கி மூன்று பேரும் மரணமடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஷாகூர் கான் மற்றும் அவரின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.