Cricket
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… ஒரு வெற்றியை கூட பெறாத கேப்டன்… யார் யாரெல்லாம் தெரியுமா..?
டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாத கேப்டன்கள் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகமானதற்கு பிறகு டி20க்கு நிகராக டெஸ்ட் தொடரும் வளர்ச்சி பெற்று வருகின்றது. கிட்டத்தட்ட அழிவுக்கு சென்று கொண்டிருந்த டெஸ்ட் கிரிக்கெட்டை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்ற புதிய தொடர் மூலம் புத்துயிர் கொடுத்துள்ளது ஐசிசிஐ நிறுவனம்.
இதனால் டி20 ஒருநாள் கோப்பைகளை வெல்வதைவிட டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கோப்பை வெல்வது தான் கௌரவமாக மாறி இருக்கின்றது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட வெல்லாத கேப்டன்கள் குறித்து தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம்.
முதலாவது பாகிஸ்தான் கேப்டன் ஜான் மசூத், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட இவர் தற்போது வரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை.
இரண்டாவது வங்கதேச அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த ஷகிப் அல் ஹசன், உலக டெஸ்ட் தொடரில் நான்கு முறை கேப்டனாக இருந்திருக்கின்றார். நான்கிலும் வங்கதேச அணி தோல்வியை தான் சந்தித்தது.
நீல் பிராண்ட் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வந்த நீல் பிராண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு முறை தென்ஆப்பிரிக்கா அணியை வழிநடத்தினார். இரண்டு போட்டிகளிலும் அவர் தோல்வியை சந்தித்தார்.
தினேஷ் சண்டிமல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணியை இரண்டு முறை வழி நடத்திய தினேஷ் சண்டிமல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை கொடுத்திருக்கின்றார்.
முகமது ரிஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு முறை பாகிஸ்தான் அணியை வழிநடத்திய முகமது ரிஸ்வான் இரண்டிலும் தோல்வியை சந்தித்தார்.
அடுத்ததாக பும்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கடந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்டில் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். அந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.