Connect with us

india

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்டின் திருமணம்… மும்பைக்கு வருகை தந்த WWF ஜான் சீனா…

Published

on

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக குத்துசண்டை வீரர் சீனா மும்பை வந்து இருக்கின்றார்.

உலக பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவர் நீதா அம்பானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த அம்பானி என இரண்டு மகன்களும் ஈஷா அம்பானி என்ற மகளும் உள்ளார். இதில் ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற முடிந்தது.

இவரின் கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும் வைர வியாபாரியின் மகளான ராதிகா மெர்சண்ட்க்கும் இன்று திருமணம் நடைபெற இருக்கின்றது. உலகமே வியக்கும் வகையில் மூன்று நாட்கள் திருமணம் நடைபெற இருக்கின்றது. கடந்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நிச்சயம் நடைபெற்றது.

இதில் உலக பிரபலங்கள் உள்ளிட்ட 1200 பேர் கலந்து கொண்டனர் . திருமணத்திற்கு முந்திய வைபவங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இன்று மும்பை பந்தரா குருளா காம்ப்ளக்ஸில் திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காலை முதலில் மும்பைக்கு பல பிரபலங்கள் படையெடுத்து வருகிறார்கள்.

அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், ஹாலிவுட் பிரபலங்கள், பெரும் பணக்காரர்கள் வெளிநாட்டு பிரபலங்கள் என அனைவரும் வருகை தந்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபல டபிள்யூ டபிள்யூ எஃப் மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா இன்று திருமண விழாவில் பங்கேற்பதற்கு மும்பை வந்தடைந்தார். அவர் மும்பை விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு செல்லும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இவர் மல்யுத்தபோட்டியில் இருந்து சமீபத்தில் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *