Connect with us

india

மிஸ்டு கால் மூலம் பழக்கமான திருநங்கை!.. வாலிபருக்கு நடந்த சோகம்!..

Published

on

murder

இப்போதெல்லாம் எந்த பழக்கம் எங்கே போய் கொண்டு போய் விடமென்றே கணிக்க முடியாது. அதுவும், தேவையில்லாத பழக்கம் உயிரையும் எடுத்துவிடும் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் மைசூரில் நடந்திருக்கிறது. மைசூர் மாவட்டம் உன்சூர் டவுன் பகுதியில் வசித்து வந்த இளைஞர் ராகுல் மவுரியா. இவருக்கு வயது 18.

ராகுல் உன்சூர் டவுனில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். அப்போது செல்போன் மிஸ்டு கால் மூலம் ஒரு திருநங்கை அறிமுகமானார். அதன்பின் அந்த திருநங்கை ராகுலை நேரில் வந்து சந்தித்து பேசியிருக்கிறார். அதன்பின் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த திருநங்கை ராகுலை நச்சரித்துள்ளார். ஆனால், ராகுலுக்கு அதில் விருப்பமில்லை. எனவே, திருநங்கை தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

இதனால், அப்செட் ஆன ராகுல் கடந்த 4 மாதங்களாக வீட்டுக்கு வரவில்லை. வேறு எங்கோ சென்று தலைமறைவாகிவிட்டார். அவரின் வீட்டுக்கு வந்து திருநங்கை அவரின் பெற்றோரை மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் ராகுல் தனது வீட்டிற்கு வந்திருக்கிறார். இதையறிந்த அந்த திருநங்கை சில திருநங்கைகளை கூட்டிக்கொண்டு ராகுலின் வீட்டிற்கு போயிருக்கிறார்.

ராகுலின் பெற்றோரிடம் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லையேல் போலீஸில் புகார் கொடுப்பேன் என சொல்லி மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார். இதனால் வேதனை அடைந்த ராகுல் அன்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ராகுலுக்கு தொல்லை கொடுத்த அந்த திருநங்கையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *