india
போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது… ரூ.45,000 ரூபாய்க்கு ஆப்பு… டேட்டிங் செயலியால் நொந்து போன வாலிபர்..!
டேட்டிங் செயலியால் இளைஞர் ஒருவர் 45 ஆயிரம் வரை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்தியாவில் தற்போது டேட்டிங் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. அதிலும் டெல்லி, மும்பை போன்ற நகரப் பகுதிகளில் இந்த கலாச்சாரம் வேகமாக பரவி வருகின்றது. இந்த செயலி மூலம் இளம் ஜோடிகள் தங்களின் துணையை தேடி கொள்கிறார்கள். இந்த செயலியை பயன்படுத்தி சில மோசடி சம்பவங்களும் அரங்கேரி தான் வருகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் அரங்கேறி இருக்கின்றது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரபல டேட்டிங் செயலியில் ஒன்றான டின்டர் செயலி மூலமாக ஒரு பெண்ணுடன் அறிமுகமாக இருக்கின்றார். அந்தப் பெண்ணுடன் சாட்டிங் செய்து கொண்டிருந்த இவர் பின்னர் ஒரு ஓட்டலுக்கு சென்று இருக்கின்றார். ஒரு இளம் பெண்ணுடன் டேட்டிங் என்ற உற்சாகத்தில் இருந்த வாலிபர் அந்த பெண் என்னவெல்லாம் கேட்கிறாரோ அதை அனைத்தையும் ஆர்டர் செய்து கொடுத்திருக்கின்றார்.
18 ஜாகர்பாம்பஸ், 2 ரெட்புல்ஸ், ஃப்ரஞ்ச் ப்ரைஸ், சாலட் என்று உணவு பட்டியலில் நீண்டு கொண்டே போகின்றது. இவற்றையெல்லாம் சாப்பிட்ட இளைஞர் பின்னர் அந்த உணவிற்கான பில் வந்ததும் மிகவும் ஷாக்காக இருக்கின்றார். கிட்டத்தட்ட 44,829 ரூபாய் பில் வந்திருக்கின்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர் எப்படியோ நண்பர்களிடம் உதவி கேட்டு பில் தொகையை செட்டில் செய்திருக்கின்றார்.
பாதிக்கப்பட்ட அந்த வாலிபரின் நண்பர் உணவகத்தின் பில்லை ரெடிங் என்ற தளத்தில் பதிவிட்டு இருக்கின்றார். இந்த பில்லானது மிக வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.