Connect with us

Cricket

எம்.எஸ். டோனி நல்ல கேப்டன் தான்.. ஆனால்.. யுவராஜ் சிங்கின் ஓபன் டாக்..!

Published

on

Yuvraj-Singh-MS-Dhoni-Featured-Img

இந்திய அணியின் கொண்டாடப்பட்ட ஆல்-ரவுன்டர் யுவராஜ் சிங், எம்.எஸ். டோனி குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் எண்ணற்ற பங்களிப்பை வழங்கி இருக்கும் யுவராஜ் சிங் எம்.எஸ். டோனி போன்ற வீரரை கேப்டனாக வைத்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி பேசி இருக்கிறார். இவரது வார்த்தைகள் மூலம் உலக கோப்பை தொடர்களில் எம்.எஸ். டோனி ஆற்றிய பங்கு பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் யுவராஜ் சிங் கூறியதாவது..,

Yuvraj-Singh-MS-Dhoni

Yuvraj-Singh-MS-Dhoni

“மும்பை இந்தியன்ஸ் அணியை நீண்ட காலத்திற்கு வழிநடத்தி வருவதால், ரோகித் ஷர்மா சிறந்த தலைவராக உருவெடுத்து இருக்கிறார். கடுமையான காலக்கட்டங்களில் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர் ரோகித் ஷர்மா. இவரை போன்ற அனுபவம் மிக்க கேப்டனுக்கு சிறந்த வீரர்களை கொடுக்க வேண்டும். எம்.எஸ். டோனியும் சிறந்த கேப்டன், அவரிடம் சிறப்பான அணி இருக்கிறது. எம்.எஸ். டோனியும் நல்ல கேப்டனாக இருந்தார், அவரிடமும் சிறப்பான அணி இருந்தது, சரிதானே?,” என்று தெரிவித்து இருக்கிறார்.

வெற்றிகர தலைமை, கச்சிதமான கேப்டன் மற்றும் சிறப்பான அணி – இவை மட்டுமே இந்திய அணி உலக கோப்பை பயணங்களில் வெற்றியை தேடிக் கொடுத்துள்ளன என்பதை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்து இருக்கிறது.

Yuvraj-Singh-MS-Dhoni-1

Yuvraj-Singh-MS-Dhoni-1

சமூக வலைதளத்தில் எம்.எஸ். டோனி வெற்றிகர கேப்டன் என்ற போதிலும், 2011 உலக கோப்பை தொடரில் யுவராஜ் சிங் பங்களிப்பு குறித்து இரண்டு வீரர்களின் ரசிகர்கள் அவ்வப்போது சண்டையிட்டு கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒருபக்கம் எம்.எஸ். டோனியின் புகழ் மற்றும் அவர் செய்த சாதனைகளை பதிவுகளாக வெளியிடும் கூட்டம், மறுபக்கம் யுவராஜ் சிங்கின் அதிரடி பேட்டிங் மற்றும் போட்டியில் வெற்றி பெற செய்யும் திறன்களை எடுத்துக்கூறும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இரு வீரர்களின் மோதல் காரணமாக எம்.எஸ். டோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் களத்தில் செலுத்திய ஆதிக்கம் மற்றும் இந்திய கிரிக்கெட்டில் அவர்களது பெருமையை பொதுப்படையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் தான் உள்ளது.

google news