Cricket
இஷாந்த் இழுத்துவிட்ட பஞ்சாயத்து.. கடுப்பான விராட் கோலி.. விளக்கம் கொடுத்த ஜாகீர் கான்!
இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதிய டெஸ்ட் சீரிசின் போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள், இஷாந்த் ஷர்மா மற்றும் ஜாகீர் கான் கமென்ட்ரி செய்து வந்தனர். கமென்ட்ரியின் போது இஷாந்த் ஷர்மா பகிர்ந்து கொண்ட சம்பவம் ஒன்றுக்கு ஜாகீர் கான் விளக்கம் அளித்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 2014 பிப்ரவரி மாதம் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி தவற விட்ட கேட்ச் காரணமாக aஜாகீர் கான் தனது கிரிக்கெட்டில் இருந்து விடைபெற நேரிட்டது என்று ஜாகீர் கான் கூறியதாக இஷாந்த் ஷர்மா தெரிவித்தார்.
இந்த போட்டியின் போது விராட் கோலி பிரென்டன் மெக்கல்லம்-இன் கேட்ச்-ஐ தவற விட்டார். அதே இன்னிங்ஸ்-இல் மெக்கல்லம் 300 ரன்களை விளாசினார். இது குறித்து இஷாந்த் ஷர்மா கூறியதாவது..,
“நாங்கள் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி கொண்டிருந்தோம். ஜாகீர் கான் விசிய பந்தை எதிர்கொண்ட பிரென்டன் மெக்கல்லம் அடித்த ஷாட் கேட்ச்-ஆக மாறியது. எனினும், விராட் கோலி அதனை தவற விட்டார், இதைத் தொடர்ந்து மெக்கல்லம் 300 ரன்களை எடுத்திருந்தார். பிறகு உணவு இடைவேளையின் போது விராட் கோரி, ஜாகீர் கானிடம் மன்னிப்பு கேட்டார். ”
“இதற்கு ஜாகீர் கான் பரவாயில்லை, அவர் விக்கெட்டை எடுத்துவிடலாம் என்று கூறினார். மீண்டும் தேநீர் இடைவெளியின் போது விராட் மீண்டும் ஜாகீர் கானிடம் மன்னிப்பு கோரினார். மீண்டும் ஜாகீர் கான் கவலை இல்லை என்று பதில் அளித்தார். மூன்றாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவெளியின் போது, விராட் கோலி ஜாகீர் கானிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டார், அப்போது பதில் அளித்த ஜாகீர் கான், நீ எனது கிரிக்கெட் கரியரை முடிவுக்கு கொண்டுவந்து விட்டாய் என்று தெரிவித்தார்,” என கூறினார்.
இஷாந்த் ஷர்மா பகிர்ந்த சம்பவம் குறித்து ஜாகீர் கான் விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தை பொது வெளியில் கூறியதற்காக விராட் கோலி கவலை கொள்ளமாட்டார், அவர் எனது சிறுவயது நண்பர் என்று இஷாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்து ஜாகீர் கான் கூறியதாவது..,
“நான் அப்படி சொல்லவே இல்லை. இரண்டு வீரர்கள் தான் உள்ளனர், ஒருவர் கிரன் மோர். இவர் கிரஹாம் கூச்-இன் கேட்ச்-ஐ தவற விட்டார். அவர் அதே போட்டியில் 300 ரன்களை விளாசினார். அதன் பிறகு விராட் கோலி கேட்ச்-ஐ தவற விட்டு, மெக்கல்லம் 300 ரன்களை எடுத்தார். இதை தான் கோலியிடம் நான் கூறினேன். அவர் என்னை அவ்வாறு பேச வேண்டாம் என்று கூறினார், யாரும் இதனை விரும்ப மாட்டார்கள். கேட்ச் தவற விடப்பட்டது, பிறகு ரன்கள் எடுக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.